Home லைப் ஸ்டைல் தினமும் 2 பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 வியக்கத்தக்க நன்மைகள்..!!

தினமும் 2 பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 வியக்கத்தக்க நன்மைகள்..!!

நாம் ஆரோக்கியமாக வாழ அன்றாட உணவில் பாதாம், முந்திரி போன்ற உலர் பருப்புகளைச் சேர்ப்பது அவசியம் என்றாலும், ஊறவைத்த பேரீச்சம்பழம் பல்வேறு நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது. இதில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் வைட்டமின் A, B, C, E என ஒட்டுமொத்த சத்துக்களும் அடங்கியுள்ளன.முக்கியமாக, தினமும் இரண்டு பேரீச்சம்பழங்களை ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் செரிமான மண்டலம் பலம்பெறுகிறது. இது மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை (Acidity) போன்ற வயிற்று உபாதைகளைச் சரிசெய்து குடலைத் தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது.

மேலும், நரம்புகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் மூளையின் நினைவாற்றல் மற்றும் கவனிக்கும் திறனை இது மேம்படுத்துகிறது.ரத்த சோகையினால் அவதிப்படுபவர்களுக்குப் பேரீச்சம்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, உடல் முழுவதும் ஆக்சிஜன் சீராகச் செல்ல உதவுகிறது. இதனால் உடல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கும்.

இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்து உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கிறது. எலும்புத் தேய்மானம் அல்லது கீல்வாதம் உள்ளவர்கள் பேரீச்சம்பழத்தைப் பாலில் ஊறவைத்துச் சாப்பிடும்போது கால்சியம் சத்து இரட்டிப்பாகக் கிடைக்கிறது. இதன் மூலம் எலும்பு அடர்த்தி அதிகரித்து உடல் வலிமை பெறுகிறது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்…

Exit mobile version