தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளருமான எச். ராஜா அவர்கள் தற்போது மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு அவரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொள்வதைத் தவிர்க்குமாறு அவரது தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து எச். ராஜா தரப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா அவர்கள் தற்போது மருத்துவச் சிகிச்சையில் இருந்து வருகிறார். எனவே, அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், முறையான ஓய்வு தேவைப்படுவதாலும், தேசபக்த உறவுகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் யாரும் அவரது எண்ணிற்குச் சில தினங்களுக்குத் தயவுசெய்து அழைக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அல்லது என்ன விதமான சிகிச்சையில் இருக்கிறார் என்பது குறித்த கூடுதல் விவரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை. இருப்பினும், அவர் விரைவில் குணமடைந்து மக்கள் பணியைத் தொடர வேண்டுமென அவரது ஆதரவாளர்களும் கட்சித் தொண்டர்களும் சமூக வலைதளங்களில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்…

