Monday, March 2, 2026
No menu items!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதன்முறையாக 200 ரன்கள்..! பாகிஸ்தான் அதிரடி சாதனை..!!

லாகூரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. சர்வதேச டி20 வரலாற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதன்முறையாக 200 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை பதிவு செய்து பாகிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது.

ஏற்கனவே இந்த டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களை குவித்தது.

ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள், அணியின் ஸ்கோரை 200-க்கு மேல் உயர்த்தினர். இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் பாகிஸ்தானின் மிகச்சிறந்த பேட்டிங் செயல்பாடாகப் பார்க்கப்படுகிறது. 208 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்த்து ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest News