Monday, March 2, 2026
No menu items!

என்னை பைத்தியம்னு சொன்ன அமீர்..!! பதிலடி கொடுத்த ராஜகுமாரன் பரபரப்பு பேட்டி..

தமிழ் திரையுலகில் இயக்குனர்களுக்கு இடையேயான கருத்து மோதல்கள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இயக்குனர் அமீர் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று விமர்சித்ததற்கு, இயக்குனர் ராஜகுமாரன் தற்போது மிகக் கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்துள்ளார்.

​இது குறித்து இயக்குனர் ராஜகுமாரன் பேசியதாவது, “என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அமீர் சொல்கிறார். இதே வார்த்தையை இயக்குனர் சசிகுமாரை சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று சவால் விடுத்துள்ளார்.

​மேலும் அவர் பேசுகையில், “ஒரு மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை அவர் எடுக்கும் படத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். சசிகுமார் இயக்கிய ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் வன்முறை (Violence) இருந்தாலும், அதை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க முடியும். ஆனால், அமீரின் ‘பருத்திவீரன்’ படத்தை அப்படி பார்க்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

​தொடர்ந்து அமீரின் படைப்பை விமர்சித்த அவர், “பருத்திவீரன் படத்தில் ஹீரோ உட்பட யாருமே நல்ல கதாபாத்திரங்கள் கிடையாது. அந்தப் படமே ஒரு சாக்கடை. இதுதான் சசிகுமாருக்கும் அமீருக்கும் உள்ள வித்தியாசம்” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

​இயக்குனர் ராஜகுமாரனின் இந்தத் கடுமையான விமர்சனம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News