Home செய்திகள் மொபைல் , டிவி பயன்படுத்துவதற்கு தடை – கிராமத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

மொபைல் , டிவி பயன்படுத்துவதற்கு தடை – கிராமத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

நாட்டில் எந்த அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைகிறதோ, அதே அளவிற்கு மக்களின் சோம்பேறித்தனமும் அதிகரிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் . குறிப்பாக ஒரு காலத்தில் பள்ளியிலிருந்து வந்தவுடன் துள்ளி குதித்து விளையாடி மகிழ்ந்தனர் குழந்தைகள். ஆனால் இப்போதுள்ள பெரும்பாலான குழந்தைகள் டிவி மற்றும் மொபைல் போனுக்கு அடிமையாகி உள்ளனர்,

என்று தான் சொல்ல வேண்டும் . குறிப்பாக இதை பல பெற்றோர்கள் கண்டு கொள்வதில்லை என்பது தான் மிகப்பெரிய வருத்தமே .இப்படியே சென்றால் அவர்களுடைய பழக்கவழக்கங்களும் மாறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படி இருக்கும் நிலையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹலகா கிராமத்தில் தினமும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை ,

மொபைல் போன் மற்றும் டிவி பயன்படுத்துவதற்கு தடை போட்டு உள்ளாராம் அந்த கிராமத்தின் தலைவர் . குறிப்பாக இந்த முடிவை அமல்படுத்துவதற்காக தினமும் சைரன் ஒழிக்கப்படுமாம் . இப்படி ஒரு நல்ல காரியத்தை செய்த அந்த ஊர் தலைவருக்கு பல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது…

Exit mobile version