Monday, March 2, 2026
No menu items!

தவெக-வின் 3-ம் ஆண்டு விழா.. ஆந்திர முன்னாள் எம்.பி வரப்பிரசாத் ராவ் திடீர் வருகை – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சியின் அடுத்தகட்ட நகர்வாக முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், ஆந்திர மாநிலம் திருப்பதி தொகுதியின்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் (Ex-MP), ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான வேலக்கப்பள்ளி வரப்பிரசாத் ராவ், விஜய் முன்னிலையில் இன்று தவெக-வில் இணைய உள்ளார். பனையூர் அலுவலகம் வருகை: இந்த இணைப்புக்காக வரப்பிரசாத் ராவ்

இன்று காலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் அவர் தன்னை முறைப்படி கட்சியில் இணைத்துக்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலக்கப்பள்ளி வரப்பிரசாத் ராவ் தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது பணிக்காலத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக (Collector)

சிறப்பாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தமிழக நிர்வாக நடைமுறைகளை நன்கு அறிந்த ஒரு மூத்த அதிகாரி கட்சியில் இணைவது, தவெக-விற்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News