சமூக வலைதளங்களில் ராஷ்மிகாவுக்கும், பிரபல நடிகர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தீயாய் பரவின. குறிப்பாக, இவர்கள் இருவரும் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இதை தொடர்ந்து ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து ராஷ்மிகா தற்போது மௌனம் கலைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “என் திருமணத்தைப் பற்றி பரவும் செய்திகளில் உண்மை ஏதுமில்லை.
தற்போது எனது முழுக் கவனமும் சினிமாவில் மட்டுமே உள்ளது. கைவசம் பல பெரிய படங்கள் உள்ளன. திருமணம் நடக்கும்போது நானே அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் அறிவிப்பேன். அதுவரை தயவுசெய்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம்,” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது ‘புஷ்பா 2’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் ராஷ்மிகாவின் இந்த விளக்கம், அவரது ரசிகர்களுக்குத் தெளிவைத் தந்துள்ளதோடு, வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது…

