Monday, March 2, 2026
No menu items!

விராட் கோலி கொடுத்த பரிசு – நெகிழ்ந்து போன நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல்..!!

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாகத் திகழும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி குறித்து, நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் டேரில் மிட்செல் நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது விராட் கோலி தனது கையெழுத்திட்ட ஜெர்சியை மிட்செல்லுக்கு பரிசாக வழங்கினார்.இது குறித்துப் பேசிய டேரில் மிட்செல், “விராட் கோலியின் கையெழுத்து பொறித்த இந்த ஜெர்சியை நான் பத்திரமாக பிரேம் (Frame) செய்து எனது அலுவலகத்தில் வைப்பேன்.

நான் வியந்து பார்க்கும் ஒரே வீரர் அவர்தான்,” என்று உற்சாகமாகக் கூறினார். மேலும், கடந்த 20 ஆண்டுகளாக விராட் கோலியின் ஆட்டத்தை தான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அவரது அர்ப்பணிப்பு தன்னை எப்போதும் வியக்க வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மைதானத்தில் ஆக்ரோஷமாகச் செயல்பட்டாலும்,

சக வீரர்களிடம் கோலி காட்டும் அன்பும் மரியாதையும் தற்கால கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. இந்த நெகிழ்ச்சியான தருணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகத் தரம் வாய்ந்த இரு வீரர்கள் தங்களுக்குள் காட்டும் இந்த பரஸ்பர மரியாதை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News