Home அரசியல் திமுகவை எதிர்க்கும் தில்லு த.வெ.க.வுக்கு தான் இருக்கு – விஜய் ஆவேசம்..!!

திமுகவை எதிர்க்கும் தில்லு த.வெ.க.வுக்கு தான் இருக்கு – விஜய் ஆவேசம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்று உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.அவர் பேசுகையில், “தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் திமுகவை வீழ்த்தும் சக்தி த.வெ.க.வுக்கு மட்டுமே உள்ளது” என முழங்கினார். திமுகவின் செயல்பாடுகளைத் தட்டிக் கேட்கும் துணிச்சலும், தில்லும் தங்களுக்கு மட்டுமே இருப்பதாக அவர் தொண்டர்களிடையே ஆவேசமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும், அந்த மாற்றத்தைத் தனது கட்சி நிச்சயம் வழங்கும் என்றும் உறுதி அளித்தார். 3-வது ஆண்டில் கால்பதிக்கும் த.வெ.க, மக்கள் பணிகளில் இன்னும் தீவிரமாக ஈடுபட வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

திமுகவை நேரடியாக எதிர்த்து விஜய் பேசியுள்ளது, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. வரும் தேர்தல்களில் த.வெ.க மிக முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என்பதை இந்த உரை உறுதிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்…

Exit mobile version