Home சினிமா “நீங்க ஹீரோ மெட்டீரியல்” – ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை..!!

“நீங்க ஹீரோ மெட்டீரியல்” – ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை..!!

சமீபகாலமாகத் தமிழ் சினிமாவில் சமுத்திரக்கனி, மிஷ்கின், பிரதீப் ரங்கநாதன் என இயக்குனர்கள் நடிகர்களாக உருவெடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகிறார். சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் ‘வித் லவ்’ திரைப்படத்தில் இவர் நாயகனாக நடிக்க, அனஸ்வரா ராஜன் ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் புரமோஷன் பணிகளின் போது பேசிய அபிஷன், தனது தயக்கம் குறித்து மனம் திறந்தார். “சௌந்தர்யா மேடம் என்னை ஹீரோவாக அழைத்தபோது எனக்குள் பெரும் தயக்கம் இருந்தது. அழகான அனஸ்வரா ராஜன் அருகில் நின்றால் என்னை மக்கள் கல்லால் அடிப்பார்களோ என்று கூட பயந்தேன்” என்றார். ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைச் சந்தித்தபோது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

அபிஷனைப் பார்த்த ரஜினி, “நீங்க ஹீரோ மெட்டீரியல்” என்று பாராட்டியுள்ளார். அந்த ஒரு வார்த்தை தனது தாழ்வு மனப்பான்மையை நீக்கி, பெரும் தன்னம்பிக்கையைத் தந்ததாக அபிஷன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இயக்குனராக வெற்றி பெற்ற அபிஷன், நடிகராகவும் முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது…

Exit mobile version