Home லைப் ஸ்டைல் வறண்ட உதடுகள் மென்மையாக மாற வேண்டுமா.?? இதோ எளிய வீட்டு வைத்தியம்..!!

வறண்ட உதடுகள் மென்மையாக மாற வேண்டுமா.?? இதோ எளிய வீட்டு வைத்தியம்..!!

பருவநிலை மாற்றத்தின் போது உதடுகள் வறண்டு, வெடிப்பு ஏற்படுவது பொதுவான பிரச்சனையாக உள்ளது. இதற்குப் பலரும் சந்தையில் கிடைக்கும் ரசாயன லிப் பாம்களைப் பயன்படுத்தினாலும், அவை தற்காலிக நிவாரணத்தையே வழங்குகின்றன. இந்நிலையில், உதடுகளின் ஈரப்பதத்தை இயற்கையாகவே தக்கவைக்க ‘தேன் மற்றும் ரோஜா இதழ்கள்’ கலவை ஒரு சிறந்த தீர்வாகப் பரிந்துரைக்கப்படுகிறது. தேனில் உள்ள இயற்கை மாய்ஸ்சரைசர் பண்புகள் உதடுகளை மென்மையாக்கி, விரிசல் அடைவதைத் தடுக்கின்றன.

பாலில் ஊறவைத்த ரோஜா இதழ்களுடன் தேன் கலந்து தடவுவதன் மூலம் உதடுகளுக்கு ஆழமான ஊட்டச்சத்தும், இயற்கை நிறமும் கிடைக்கிறது. இந்த கலவையை 15 நிமிடங்கள் உதட்டில் தடவி, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவுவதன் மூலம் பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான உதடுகளைப் பெறலாம்…

Exit mobile version