Home அரசியல் யாரோடு கூட்டணி..?? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சொன்ன ‘சீக்ரெட்’ பிளான்..!!

யாரோடு கூட்டணி..?? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சொன்ன ‘சீக்ரெட்’ பிளான்..!!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணி குறித்துத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுக்குத் தோழமை கட்சிகள்தான் என்று குறிப்பிட்ட அவர், கூட்டணி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார். இது தொடர்பாகத் தனது கட்சியினருடன் விரிவான ஆலோசனை செய்த பிறகு, தெளிவான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, “எங்களுக்கு உரிய மரியாதை எங்கே கிடைக்கிறதோ, அந்த இடத்தில் மட்டுமே கூட்டணி வைப்போம்” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தேர்தல் நெருங்கும் வேளையில், கௌரவமான இடப்பகிர்வு மற்றும் அங்கீகாரத்தையே தேமுதிக எதிர்பார்ப்பதை இவரது பேச்சு உணர்த்துகிறது.

இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேமுதிக எந்தப் பக்கம் சாயும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தொண்டர்களுக்கு அவர் நம்பிக்கை அளித்துள்ளார்…

Exit mobile version