Monday, March 2, 2026
No menu items!

சினிமா ஆசையைத் தவிர்த்து மகனை மருத்துவர் ஆக்கிய வையாபுரி – குவியும் பாராட்டுகள்..!!

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் வையாபுரி, தனது மகனின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்துப் பேட்டி ஒன்றில் உருக்கமாகப் பேசியுள்ளார். தனது மகனைச் சிறுவயதில் படப்பிடிப்புத் தளங்களுக்கு அழைத்துச் செல்லும்போதெல்லாம், அங்குள்ளவர்கள் அவனைப் பார்த்து “அடுத்த ஹீரோ ரெடி” என்று புகழ்வார்களாம். அத்தகைய புகழ்ச்சிகள் மகனின் மனதை மாற்றி, அவனுக்குச் சினிமா மீது அதீத ஆசையை வரவழைத்துவிடுமோ என்ற பயம் தமக்கு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், தனது மகனிடம் அவ்வப்போது “முதலில் டாக்டர் படி.. ஒரு தொழிலைக் கற்றுக்கொள்” என்று அறிவுறுத்தி வந்ததாக அவர் கூறியுள்ளார்.சினிமா ஆசை இருந்தால் பிறகு நடித்துக்கொள்ளலாம் என்றும், ஆனால் ஒரு நிரந்தரமான தொழில் கையில் இருக்க வேண்டும் என்பதிலும் தான் உறுதியாக இருந்ததாக வையாபுரி குறிப்பிட்டுள்ளார். தந்தையின் ஆசைப்படியே அவரது மகன் தற்போது படித்து மருத்துவராகி விட்டார் என்பதை அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தனது தொழிலைப் பார்க்குமாறு மகனுக்கு அவர் இப்போதும் அறிவுரை கூறி வருகிறார். சினிமா வாரிசுகள் பெரும்பாலும் திரைத்துறைக்கே வரும் சூழலில், தனது மகனை மருத்துவராக உருவாக்கிய வையாபுரியின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News