இந்தியாவின் அரசியலமைப்பைத் துல்லியமாகப் பின்பற்ற முடியாவிட்டால், இந்தியாவை விட்டு வெளியேறலாம் என வாட்ஸ்அப் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் இன்று அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப் பயனர்களின் அந்தரங்கத் தகவல்களைப் ஃபேஸ்புக் (மெட்டா) நிறுவனத்துடன் பகிர்ந்து, நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபட்டதாக மெட்டா நிறுவனத்திற்கு ரூ. 213 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை எதிர்த்து மெட்டா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. பயனர்களின் தரவுப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டியதன் அவசியத்தை நீதிபதிகள் வலியுறுத்தினர்.
இந்தியச் சட்டங்களுக்கு மேலானவர்கள் எவரும் இல்லை என்பதைத் தனது உத்தரவின் மூலம் நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பு சமூக வலைதள நிறுவனங்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் நீதிமன்றம் இதன் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது…
