Monday, March 2, 2026
No menu items!

ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடப்படுமா..?? வருமான வரித்துறை அதிரடி முடிவு..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தத் தவறினால், அவரது சொத்துக்கள் ஏலம் விடப்படும் என வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவிற்குச் சொந்தமான ரூ. 13 கோடி வரி பாக்கி தொடர்பான நோட்டீஸை எதிர்த்து, அவரது வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணையின் போது, சட்டப்படி செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை உரிய காலத்திற்குள் செலுத்தவில்லை என்றால்,

அத்துறையின் விதிகளின்படி சொத்துக்களை ஏலம் விட்டு அத்தொகையை வசூலிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த வரி விவகாரத்தில், தற்போது வருமான வரித்துறை எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் உள்ளிட்ட முக்கிய சொத்துக்கள் இந்த வரிப் பிரச்சனையில் தொடர்புடையதாகக் கூறப்படும் நிலையில்,

நீதிமன்றத்தின் அடுத்தகட்டத் தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வாரிசுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் வாதங்கள் மற்றும் வரி பாக்கித் தொகை குறித்த கணக்கீடுகள் குறித்து நீதிமன்றம் விரிவாக ஆய்வு செய்து வருகிறது. வரி செலுத்தத் தவறினால் முன்னாள முதலமைச்சரின் சொத்துக்கள் ஏலத்திற்கு வரும் நிலை உருவாகியுள்ளதால், அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் இது கவலையை ஏற்படுத்தியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News