Monday, March 2, 2026
No menu items!

ரூ.34,000 கோடி தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் – முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் அதிரடி..!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்ரவரி 5, 2026) தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ரூ.34,000 கோடி மதிப்பிலான 15 புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டிற்கும் (Interim Budget) இன்றைய கூட்டத்தில் முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய புதிய மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்தும் முதலமைச்சர் ஆலோசனைகளை வழங்கினார். இந்த 15 புதிய தொழில் திட்டங்கள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News