Monday, March 2, 2026
No menu items!

“பகவதி படத்திலேயே விஜய் CM ஆக வேண்டியது” – இயக்குனர் வெங்கடேஷ் சொன்ன சீக்ரெட்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய், தனது சினிமா பயணத்தின் தொடக்கத்திலேயே அரசியல் ஆசை கொண்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய ‘பகவதி’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பது போன்றே முதலில் திட்டமிடப்பட்டதாக அதன் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். ஆனால், அதே காலகட்டத்தில் வெளியான ரஜினியின் ‘பாபா’ படத்தின் கிளைமாக்ஸ் தாக்கத்தால்,

விஜய்க்கு ‘ஓவர் பில்டப்’ ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் அந்த காட்சியை மாற்றியதாக அவர் கூறியுள்ளார். இதற்கு விஜய் ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கோபப்பட்டதாகவும், எதிர்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் எனச் சமாதானம் செய்ததாகவும் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார். 30 ஆண்டுகால திரையுலக வாழ்விற்குப் பிறகு,

தற்போது 2026 தேர்தலை இலக்காகக் கொண்டு அவர் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். தனது நண்பர் தாமு கூறியது போலவே, விஜய்யின் முதல்வர் கனவு நீண்ட காலத்திற்கு முன்பே சினிமா கதைகளில் விவாதிக்கப்பட்டுள்ளது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திமுக – தவெக இடையேதான் போட்டி என விஜய் முழங்கி வரும் நிலையில், இந்த பழைய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News