Monday, March 2, 2026
No menu items!

80 பந்துகளில் 175 ரன்கள்..!! சிக்ஸர் மழை பொழிந்த சூர்யவன்ஷி..!!

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த வாழ்வா சாவா போராட்டத்தில், வெறும் 14 வயதே ஆன சூர்யவன்ஷி எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார்; இதில் 15 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரின் இறுதிப்போட்டியில், மிகச்சிறிய வயதில் இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவரது இந்த அதிரடி ஆட்டம் இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவியதுடன், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

எதிர்கால இந்திய அணியின் நம்பிக்க நட்சத்திரமாக சூர்யவன்ஷி உருவெடுத்துள்ளதாக விளையாட்டு விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். 06 பிப்ரவரி 2026 அன்று நடைபெற்ற இந்த ஆட்டம் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாக மாறியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News