இன்றைய இயந்திரமயமான உலகில் நோயற்ற வாழ்விற்கு ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மிக அவசியமாகின்றன. குறிப்பாக, தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் அல்லது 10,000 அடிகள் நடப்பது உடலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து 21 நாட்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் செரிமானக் கோளாறுகள் நீங்கி, வளர்சிதை மாற்றம் (Metabolism) சீரடைகிறது.
வாயுத் தொல்லை மற்றும் அமிலத்தன்மையால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். மன அழுத்தத்தைக் குறைத்து மனதை அமைதிப்படுத்துவதுடன், இதய ஆரோக்கியத்தையும் இது மேம்படுத்துகிறது. கலோரிகள் எரிக்கப்படுவதால் உடல் எடையைக் குறைப்பதற்கும்,
ஹார்மோன் சமநிலையின்மையைக் கட்டுப்படுத்தவும் இப்பயிற்சி உதவுகிறது. இரவு நேரங்களில் நிம்மதியான தூக்கம் கிடைக்காதவர்களுக்கு நடைப்பயிற்சி ஒரு வரப்பிரசாதமாகும். ஆரோக்கியமான உணவுமுறையுடன் நடைப்பயிற்சியையும் இணைத்துக் கொண்டால், ஆயுள் கூடுவதோடு சுறுசுறுப்பும் அதிகரிக்கும்…

