2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூட்டணி மற்றும் கட்சிச் சின்னம் குறித்து முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள சின்னம் குறித்த விவகாரத்தில், “மாம்பழம் சின்னம் எங்களுக்குத்தான் சொந்தம்; எங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும்” என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் தேர்தலுக்கான கூட்டணிக் குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக விரைவில் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் ‘நல்ல செய்தி’ வெளியாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராமதாஸின் இந்த அறிவிப்பு பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி குறித்துப் பல்வேறு யூகங்கள் நிலவி வரும் வேளையில்,
பாமகவின் இந்த நகர்வு அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. சின்னம் மற்றும் கூட்டணி உறுதியானவுடன் தேர்தல் பிரச்சாரப் பணிகளை முழுவீச்சில் தொடங்க அக்கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. இன்றைய சூழலில் பாமகவின் முடிவை நோக்கியே மற்ற கட்சிகளின் பார்வையும் திரும்பியுள்ளது…
