திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார், கடந்த சில ஆண்டுகளாகத் தனது சொந்த கார் பந்தயக் குழுவுடன் (Team) சர்வதேச அளவில் கார் ரேஸ் போட்டிகளில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார். துபாயில் நடந்த போட்டியில் இவரது அணி மூன்றாம் இடத்தைப் பிடித்து அசத்திய நிலையில், ஐரோப்பா மற்றும் மலேசியா எனப் பல்வேறு நாடுகளிலும் அஜித் களம் கண்டு வருகிறார். அஜித்தின் இந்த வேகமான மறுபக்கத்தைக் காணப் பொதுமக்கள் மட்டுமின்றி, சிம்பு, மாதவன், நயன்தாரா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் நேரில் சென்று வாழ்த்தி வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் மலேசியாவில் நடந்த கார் பந்தயத்தின் போது அஜித்தைச் சந்தித்தது குறித்து நடிகர் சிம்பு நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். துபாயில் கடை திறப்பு விழாவிற்குச் சென்றபோது, வழியில் இருந்த பந்தயக் களத்திற்குச் சென்று அஜித்தின் அனுமதி பெற்று அவரைச் சந்தித்ததாகச் சிம்பு தெரிவித்துள்ளார். பந்தய நேரத்தில் தொந்தரவு செய்ய விரும்பாமல் அனுமதி கேட்டுச் சென்ற தன்னை,
அஜித் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடியதாக அவர் கூறியுள்ளார். மேலும், தனது கார் பந்தய அனுபவங்கள் மற்றும் நுணுக்கங்கள் சிலவற்றையும் அஜித் தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகச் சிம்பு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன…
