Monday, March 2, 2026
No menu items!

தேமுதிக கூட்டணி எப்போது..?? பிப்ரவரி 17-க்குள் அறிவிப்பு என பிரேமலதா உறுதி.!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், தேமுதிகவின் தேர்தல் கூட்டணி குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே தேமுதிகவின் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் பிப்ரவரி 6-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

விருப்பமனு கட்டணமாகப் பொதுத் தொகுதிக்கு ரூ.15,000 மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.10,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் மறைவிற்குப் பிறகு தேமுதிக சந்திக்கும் மிக முக்கியமான தேர்தல் என்பதால், கூட்டணி குறித்த முடிவை மிகுந்த கவனத்துடன் பிரேமலதா மேற்கொண்டு வருகிறார்.

பிப்ரவரி 17-ம் தேதிக்குள் தேமுதிக யாருடன் கரம் கோர்க்கும் என்பது தெரிந்துவிடும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விருப்பமனு விநியோகம் தொடங்கி கூட்டணி அறிவிப்பு வரை அடுத்தடுத்த நகர்வுகளால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News