Monday, March 2, 2026
No menu items!

அமெரிக்க சந்தையில் இந்தியப் பொருட்களுக்கு மவுசு.. $500 பில்லியன் இறக்குமதிக்கு இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்..!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கிடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் “வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம்” கையெழுத்தாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ கூட்டறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • வரிக்குறைப்பு: இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, தோல் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களின் மீதான அமெரிக்காவின் வரிகள் 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோருக்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

  • பூஜ்ஜிய வரி: இந்திய மருந்துப் பொருட்கள் (Pharmaceuticals) மற்றும் ஆபரணங்களுக்கு அமெரிக்காவில் இனி பூஜ்ஜிய வரி (Zero Tax) விதிக்கப்படும். இதன் மூலம் அமெரிக்க சந்தையில் இந்தியத் தயாரிப்புகளின் போட்டித்திறன் அதிகரிக்கும்.

  • விவசாயிகள் பாதுகாப்பு: இந்திய விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, விவசாயம் மற்றும் பால் பண்ணைப் பொருட்களுக்கு இந்த ஒப்பந்தத்தில் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் விவசாய சந்தை பாதிக்கப்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • விமானப் பாகங்கள்: இந்திய விமானப் பாகங்களுக்கு வரி விலக்கு அளிக்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.

  • இறக்குமதி ஒப்பந்தம்: அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து சுமார் $500 பில்லியன் அளவுக்கு எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News