Home செய்திகள் தங்கம் விலை அதிரடி உயர்வு..!! சவரன் ரூ.1,15,000 தாண்டியது..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு..!! சவரன் ரூ.1,15,000 தாண்டியது..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் முதலீட்டாளர்களின் அதிகப்படியான தேவையால், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.1,360 அதிரடியாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால், சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,15,360 என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.14,420-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று முன்தினம் காலையில் விலை சற்று குறைந்திருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் ஏற்பட்ட இந்த திடீர் ஏற்றம் நடுத்தர வர்க்கத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. திருமண சீசன் தொடங்கி உள்ள நிலையில், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளியின் விலையும் தங்கத்தைப் பின்பற்றி உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

வரும் நாட்களில் உலகப் பொருளாதாரச் சூழலைப் பொறுத்தே விலை மாற்றம் அமையும் என வணிகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, நகைப்பிரியர்கள் தங்கத்தை முதலீடாகப் பார்ப்பதைக் காட்டிலும், அதன் விலையைக் கண்டு மலைத்துப் போய் உள்ளனர்…

Exit mobile version