Home செய்திகள் விண்ணைத் தொடப்போகும் தங்கம் விலை..!! மீண்டும் அதிரடி உயர்வு ..!!

விண்ணைத் தொடப்போகும் தங்கம் விலை..!! மீண்டும் அதிரடி உயர்வு ..!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,840 அதிரடியாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,17,200 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.14,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பே ஒரு சவரன் ரூ.1.15 லட்சத்தைத் தாண்டியிருந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிப்ரவரி 7-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.14,420-ஆக இருந்த நிலையில், இன்று அது ரூ.230 உயர்ந்துள்ளது.

திருமண முகூர்த்த நாட்கள் நெருங்கி வரும் வேளையில், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பது நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு சுமார் ரூ.3,000-க்கும் மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் காட்டி வருவதே இந்தத் தொடர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

வெள்ளியின் விலையிலும் இந்தத் தாக்கம் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய சூழலில் தங்கம் விலை குறையுமா அல்லது ரூ.1.20 லட்சத்தைத் தாண்டுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது…

Exit mobile version