Monday, March 2, 2026
No menu items!

“22 மணி நேரம் உழைக்கத் தயார்”: விஜய் பற்றி ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அதிரடித் தகவல்.!!

தமிழக அரசியல் களத்தில் த.வெ.க (தமிழக வெற்றி கழகம்) தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கட்சித் தலைவர் விஜய் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் விரிவாகப் பேசினார்.

உழைப்பால் உயர்ந்தவர்:

“தனது 30 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் முதலிடத்தைப் பிடிக்க விஜய் அவர்கள் தினமும் 16 முதல் 18 மணி நேரம் உழைத்துள்ளார். எவ்விதப் பின்னணியும் இன்றி வீட்டில் சும்மா அமர்ந்துகொண்டு யாரும் ‘நம்பர் 1’ இடத்திற்கு வந்துவிட முடியாது. இன்று அந்த உச்சாணிக் கிளையில் இருக்கும்போதே, அந்தத் துறையைத் தூக்கிப் போட்டுவிட்டு மக்கள் சேவைக்காக அவர் அரசியலுக்கு வந்துள்ளார்” என ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார்.

SOP விவகாரமும் த.வெ.க-வின் நிலையும்:

மேலும் பேசிய அவர், “மக்களுக்காகத் தெருவில் இறங்கி தினமும் 22 மணி நேரம் நடக்கக்கூட விஜய் தயாராக இருக்கிறார். ஒரு மாரத்தான் வீரரைப் போல ஓடவும் அவர் தயார். ஆனால், தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள SOP (Standard Operating Procedure) படி, காவல்துறை அனுமதி வழங்க 30 நாட்கள் ஆகும் எனச் சொல்லப்படுகிறது. இத்தகைய ஒரு கட்டுப்பாட்டைத் தமிழகத்தில் இதற்கு முன் எந்த முதலமைச்சரும் கொண்டு வந்ததில்லை” என்று ஆதவ் அர்ஜுனா அதிருப்தி தெரிவித்தார்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News