Monday, March 2, 2026
No menu items!

சென்னை பாரிமுனையில் தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்-விஜய் கடும் கண்டனம்..!!

சென்னை பாரிமுனை பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தினர் (த.வெ.க) மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு த.வெ.க தலைவர் விஜய் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பாரிமுனை பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத்

தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதலில் நான்கு மாதக் கர்ப்பிணிப் பெண் உட்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும்,

அவர்கள் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இவர்களுடன் சேர்த்து மொத்தம் ஆறு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன்” என்று விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அரசியல் களத்தில் நடந்துள்ள இந்த வன்முறைச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News