இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் திருமணத்திற்காக அரசியல் மற்றும் பல்வேறு துறை சார்ந்த முக்கியப் பிரமுகர்களை
நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இன்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சச்சின் டெண்டுல்கர் சந்தித்தார்.
அப்போது, தனது மகனின் திருமண அழைப்பிதழை அவருக்கு வழங்கி, திருமண நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர்,
மகள் சாரா டெண்டுல்கர் மற்றும் மணமகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஆகியோர் உடனிருந்தனர். மிகுந்த நெகிழ்ச்சியுடனும், நட்பு ரீதியாகவும் நடைபெற்ற இந்த சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன…

