Home செய்திகள் ஒரே ஆண்டில் 12,903 கோடி ஸ்பேம் மெசேஜ்கள் ..!! இந்தியாவில் அதிகரிக்கும் டிஜிட்டல் தொல்லை –...

ஒரே ஆண்டில் 12,903 கோடி ஸ்பேம் மெசேஜ்கள் ..!! இந்தியாவில் அதிகரிக்கும் டிஜிட்டல் தொல்லை – தப்பிப்பது எப்படி?

இந்தியாவில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் சுமார் 4,168 கோடி ஸ்பேம் (SPAM) அழைப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக ட்ரூகாலர் நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் தேவையற்ற வணிக மற்றும் மோசடி அழைப்புகளால் அலைபேசி பயனர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த மொத்த ஸ்பேம் அழைப்புகளில், சுமார் 1,189 கோடி அழைப்புகளைப் பயனர்களே நேரடியாக ‘பிளாக்’ (Block) செய்துள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அழைப்புகள் மட்டுமின்றி, குறுஞ்செய்திகள் மூலமாகவும் ஸ்பேம் தொல்லைகள் அதிகரித்துள்ளன.

அந்த வகையில், கடந்த ஆண்டில் மட்டும் 12,903 கோடி ஸ்பேம் குறுஞ்செய்திகள் (SMS) கண்டறியப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், டிஜிட்டல் பாதுகாப்பு என்பது சவாலாக மாறி வருவதை இந்த புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. குறிப்பாகப் போலி காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளே இதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

பயனர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பு செயலிகளை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். நிறுவனங்கள் மற்றும் அரசுத் தரப்பில் இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அறிக்கை தற்போது தொழில்நுட்ப மற்றும் பொது மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது…

Exit mobile version