Monday, March 2, 2026
No menu items!

“திமுக – தவெக போட்டி ஒரு பொருட்டே அல்ல – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பளிச் பதில்!”

தமிழக அரசியலில் போட்டி என்பது தற்போது ஆளும் திமுக-வுக்கும், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தவெக-விற்கும் இடையேதான் என விஜய் கூறிவருவதை நாங்கள் ஒருபோதும் பொருட்டாகவே கருதவில்லை. அதிமுக ஒரு பேரியக்கம், அதன் பலம் என்னவென்பது எங்களுக்குத் தெரியும்.பலரும் கருதுவது போல தவெக மீது அதிமுக-வுக்கு எந்தவிதமான மென்மையான போக்கோ (Soft corner) கிடையாது. முன்பு அவர்களுக்கு ஒரு பிரச்சனை வந்தபோது, சக மனிதர்கள் என்ற அடிப்படையில் மனிதாபிமானத்தோடு நாங்கள் நடந்துகொண்டோம்.

அதைத் தவிர அரசியல் ரீதியாக அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம் என்று கூறுவதில் உண்மையில்லை.திமுக மற்றும் தவெக-வுக்கு இடையிலான போட்டியைச் சுட்டிக்காட்டி அதிமுக ஓரங்கட்டப்படுவதாகக் கூறப்படுவதை ஏற்க முடியாது. எதிர்வரும் தேர்தல்களில் அதிமுக தனது பலத்தை நிரூபிக்கும்.

தமிழக மக்களின் உண்மையான பிரச்சனைகளை முன்னிறுத்தி எங்களது அரசியல் பயணம் தொடரும். மனிதாபிமான அடிப்படையில் காட்டிய அக்கறையை அரசியல் ஆதாயமாகப் பார்க்க வேண்டாம் என்று அவர் அந்த நிகழ்வில் அழுத்தமாகக் குறிப்பிட்டார்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News