Monday, March 2, 2026
No menu items!

ராணுவ அதிகாரிகள் புத்தகம் எழுத கிடுக்கிப்பிடி.. விதிகளை கடுமையாக்கும் ஒன்றிய அரசு..!!

ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் புத்தகங்கள் எழுதுவது தொடர்பான விதிமுறைகளை மிகக் கடுமையாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில், முன்னாள் ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவணே எழுதிய ‘ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’ (Four Stars of Destiny) என்ற சுயசரிதை புத்தகம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராணுவ ரகசியங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த தகவல்கள் அதில் இடம்பெற்றதே இந்தச் சர்ச்சைக்குக் காரணமாக அமைந்தது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ ரகசியங்களைப் பாதுகாக்கும் நோக்கில், புத்தகங்கள் எழுதுவது குறித்த தற்போதைய விதிகளை மறுஆய்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள ராணுவ சேவை விதிகள் மற்றும் ‘அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம்’ (Official Secrets Act) ஆகியவற்றை உள்ளடக்கி, புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் ராணுவ அதிகாரிகள் தங்கள் பணிக்கால அனுபவங்கள் அல்லது சுயசரிதைகளை எழுதும்போது, இந்தப் புதிய விதிமுறைகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News