Monday, March 2, 2026
No menu items!

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் அதிரடி மாற்றம்.. வெள்ளை மாளிகை புதிய அறிக்கை..!!

வாஷிங்டன் / புது தில்லி: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் சில முக்கிய மாற்றங்களைச் செய்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நேற்று புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய அறிக்கையின்படி, இந்தியா இறக்குமதி செய்ய வேண்டிய பொருட்களின் பட்டியலில் இருந்து ‘விவசாயம் சார்ந்த பொருட்கள்’ (Agriculture related products) என்ற வார்த்தை அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான விவசாய வர்த்தகக் கொள்கையில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

மேலும், வரிக் குறைப்பு செய்யப்பட வேண்டிய பொருட்களின் பட்டியலில் இருந்து சில குறிப்பிட்ட பருப்பு வகைகளின் (Pulses) பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தக விதிமுறைகளை எளிமைப்படுத்தவும், இரு தரப்பு பொருளாதார நலன்களை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்காவின் இந்த புதிய அறிவிப்பு, இந்திய விவசாய சந்தை மற்றும் இறக்குமதி வணிகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News