இன்றைய ராசிபலன் (13.02.2026)
-
மேஷம்: இன்று உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் பாராட்டு கிடைக்கும்.
-
ரிஷபம்: இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பேசும்போது நிதானம் தேவை.
-
மிதுனம்: வளர்ச்சி கூடும் நாள். சொத்து அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
-
கடகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களிடையே ஒற்றுமை பலப்படும். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடும்.
-
சிம்மம்: புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சி தரும்.
-
கன்னி: ஆன்மீக வழிபாட்டில் ஆர்வம் கூடும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.
-
துலாம்: வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படவும். உணவு விஷயத்தில் கவனம் தேவை.
-
விருச்சிகம்: வருமானம் உயரும் நாள். பழைய சிக்கல்கள் தீரும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
-
தனுசு: யோகமான நாள். சுபச் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
-
மகரம்: தேவையற்ற அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். அடகு வைத்த பொருட்களை மீட்க வாய்ப்பு உண்டு.
-
கும்பம்: புதிய சொத்து அல்லது வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. பிரிந்த நண்பர்கள் மீண்டும் இணைவார்கள்.
-
மீனம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபச் செய்திகள் இல்லம் தேடி வரும்…

