Monday, March 2, 2026
No menu items!

எகிப்தில் தமிழ் பிராமி கல்வெட்டுகள்: ஒன்றிய பாஜக அரசுக்கு கனிமொழி எம்.பி. அறிவுரை..!!

எகிப்து நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் குறித்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வரலாற்றுச் சான்றுகள் ஒன்றிய பாஜக அரசுக்கு ஒரு சிறந்த பாடமாக அமையும் எனத் குறிப்பிட்டுள்ளார்.

மகிழ்ச்சியளிக்கும் கண்டுபிடிப்பு:
எகிப்து நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழமையான தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி எம்.பி., “எகிப்து நாட்டின் பழமையான கல்வெட்டுகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

புதிய ஆய்வுகளின் அவசியம்:
தமிழர்களின் கடல் கடந்த பயணங்கள், பன்னாட்டு வணிகத் தொடர்புகள் மற்றும் உலகின் பிற நாகரிகங்களுடன் தமிழர்களுக்கு இருந்த உறவு குறித்து இன்னும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய கண்டுபிடிப்புகள் தமிழர்களின் தொன்மையை உலகிற்கு மீண்டும் பறைசாற்றுவதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாஜக அரசுக்கு விமர்சனம்:
தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்துப் பேசிய அவர், “இந்த நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார நலன் மற்றும் தனித்துவத்தை உறுதி செய்ய முடியாமல் திணறும் ஒன்றிய பாஜக அரசுக்கு, பாடம் கற்றுக்கொள்ள பண்டைய தமிழ் நாகரிகம் குறித்த புதிய ஆய்வுகள் மிக உதவியாக இருக்கும்” என்று மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பண்டைய தமிழர்களின் நிர்வாகத் திறனும், உலகளாவிய வணிகப் பார்வையும் இன்றைய ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்பதே அவரது கருத்தின் சாரமாகப் பார்க்கப்படுகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News