Monday, March 2, 2026
No menu items!

“பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி : மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 இன்று வரவு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!”

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் இல்லத்தரசிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். இதன்படி, தகுதியுள்ள பயனாளிகளின் வங்கித் கணக்குகளில் இன்று காலையிலேயே ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.இந்தத் தொகையானது இரண்டு பிரிவுகளாகப் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகையாக தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.3,000 முன்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், கோடைக்காலத்தைச் சமாளிக்கும் விதமாக ‘கோடைக்கால சிறப்புத் தொகுப்பு’ நிதியாக கூடுதலாக ரூ.2,000 அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் பயனாளிகளின் அலைபேசிக்கு இதற்கான குறுஞ்செய்திகள் வரத் தொடங்கியுள்ளதால் பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

அரசு நிர்வாகத்தின் இந்தத் திடீர் மற்றும் துரிதமான நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிதியுதவி கோடைக்காலத்தில் குடும்பங்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பெரிதும் உதவும் என முதல்வர் தெரிவித்துள்ளார்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News