Home சினிமா “சூர்யா – ஜோதிகா” திருமணத்திற்கு இவர்தான் காரணமா..?? சிவக்குமார் கலாய்த்த ‘அந்த நடிகை’ யார்..??

“சூர்யா – ஜோதிகா” திருமணத்திற்கு இவர்தான் காரணமா..?? சிவக்குமார் கலாய்த்த ‘அந்த நடிகை’ யார்..??

தென்னிந்திய திரையுலகின் முன்மாதிரி தம்பதிகளாகத் திகழும் சூர்யா – ஜோதிகா ஜோடியின் காதல் கதை, இன்று ஒரு சுவாரஸ்யமான மௌனத்தை உடைத்துள்ளது. இவர்களின் திருமணத்திற்குப் பின்னால் இருந்த பல போராட்டங்கள் மற்றும் திரைமறைவுத் தகவல்களை நடிகை ராதிகா மற்றும் நடிகர் சிவக்குமார் ஆகியோர் சமீபத்திய பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளனர்.சூர்யா தனது திரைப் பயணத்தின் ஆரம்பத்திலேயே ஜோதிகாவைக் காதலிக்கத் தொடங்கினாலும், தந்தை சிவக்குமாரின் கடும் எதிர்ப்பால் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ‘உயிரிலே கலந்தது’ படப்பிடிப்பின் போது சூர்யா மிகவும் அமைதியாக இருந்ததாகவும்,

அவரிடம் பேசி ஜோதிகாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியதே தான்தான் என்றும் ராதிகா அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். “ஜோதிகாவிடம் போய் பேசு சூர்யா” என்று தான் ஊக்கப்படுத்தியதாக ராதிகா நெகிழ்ச்சியுடன் கூறினார்.இதைக் கேட்ட சிவக்குமார் விளையாட்டாக, “பார்த்தீர்களா, இவர்கள் சேருவதற்குக் காரணமே இந்த பொண்ணுதான் (ராதிகா)” என்று கூறி கலகலப்பூட்டினார். மேலும், சிவக்குமாருடன் சீரியலில் நடித்தபோது, “அண்ணா, அவர்கள் காதலிக்கிறார்கள், திருமணத்திற்குச் சம்மதியுங்கள்”

என்று தான் தொடர்ந்து பரிந்துரை செய்ததாகவும் ராதிகா கூறினார். அந்தச் சமயத்தில் சூர்யா அடிக்கடி ராதிகாவிற்கு போன் செய்து, “அப்பா என்ன சொல்கிறார் அக்கா?” என்று ரகசியமாக விசாரிப்பாராம். தந்தை சிவக்குமாரின் சம்மதத்தைப் பெறுவதற்கு சூர்யா எடுத்த விடாமுயற்சியும், அவருக்குப் பக்கபலமாக ராதிகா இருந்ததும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…

Exit mobile version