தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக குறைந்து நகை வாங்குவோருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் சந்தை நிலவரங்களின் காரணமாக, இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை கணிசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்துள்ளது. இதன்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.1,15,200 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலையில் ரூ.200 சரிவு ஏற்பட்டு, இன்று ரூ.14,400-க்கு விற்பனையாகிறது.
கடந்த வாரங்களில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டு வந்த நிலையில், இந்த திடீர் விலை வீழ்ச்சி இல்லத்தரசிகள் மற்றும் திருமணத்திற்காக நகை சேமிப்போரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், வெள்ளி விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி நிலைப்புத் தன்மை காணப்படுகிறது. வரும் நாட்களில் சர்வதேச சந்தையில் நிலவும் டாலரின் மதிப்பு மற்றும்,
முதலீட்டு மாற்றங்களைப் பொறுத்தே விலை நிலவரம் அமையும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது விலை குறைந்துள்ள சூழலில், நகைக்கடைகளில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது…
