Home சினிமா ரூ. 225 கோடி சம்பளம்..!! தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைக்கும் “சூப்பர் ஸ்டார்” ..!!

ரூ. 225 கோடி சம்பளம்..!! தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைக்கும் “சூப்பர் ஸ்டார்” ..!!

சமீபத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தனது 173-வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்குள்ளாகவே அவரது 174-வது படம் குறித்த அதிரடித் தகவல்கள் கசிந்துள்ளன.இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘தலைவர் 174’ திரைப்படத்தில், உலகநாயகன் கமல்ஹாசனுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்தின் புரோமோ படப்பிடிப்பு அண்மையில் ரகசியமாக நடந்து முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவருமே 80-களின் காலக்கட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் ‘ரெட்ரோ’ கெட்டப்பில் தோன்றியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மிக முக்கியமாக, இந்தப் படத்திற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு பேசப்பட்டுள்ள சம்பளம் சுமார் ரூ. 225 கோடி எனத் தெரிகிறது. இது தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு நடிகர் பெறும் மிக உயர்ந்த சம்பளமாகக் கருதப்படுகிறது.

இதன் மூலம் இந்தியத் திரையுலகின் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களின் பட்டியலில் ரஜினிகாந்த் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். திரையுலக ஜாம்பவான்கள் இருவரும் இணையும் இந்த மெகா பட்ஜெட் படம், ரசிகர்களிடையே இப்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது…

Exit mobile version