இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), தனிநபர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆதார் அட்டையின் வடிவமைப்பில் புதிய மாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது. இனி வரும் காலங்களில் அச்சிடப்படும் புதிய ஆதார் அட்டைகளில், பயனரின் புகைப்படம் மற்றும் QR கோடு மட்டுமே வெளிப்படையாகத் தெரியும் வகையில் வடிவமைக்கப்படும்.பொது இடங்களில் ஆதார் அட்டையை அடையாளச் சான்றாகப் பயன்படுத்தும் போது, தனிப்பட்ட தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் எண், வீட்டு விலாசம் மற்றும் இதர முக்கியமான விவரங்கள் அட்டையின் மேற்புறத்தில் நேரடியாகத் தெரியாது.
தகவல்களைச் சரிபார்க்க வேண்டிய நிறுவனங்கள் அல்லது அதிகாரிகள், அட்டையில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் மட்டுமே தேவையான விவரங்களைப் பெற முடியும். டிஜிட்டல் யுகத்தில் அதிகரித்து வரும் தரவுத் திருட்டுகளைத் (Data Theft) தவிர்க்க இந்த பாதுகாப்பு அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என UIDAI தெரிவித்துள்ளது.
தனிநபர் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றத்திற்குப் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய அட்டை அச்சிடும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும், பழைய அட்டைகளைப் பயன்படுத்துவோர் தற்போதைக்கு மாற்ற வேண்டிய கட்டாயமில்லை என்றும் கூறப்படுகிறது…
