மாறிவரும் வானிலை மாற்றத்தால் சருமத்தைப் போலவே உதடுகளும் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன. குறிப்பாக உதடுகளில் ஏற்படும் வெடிப்பு மற்றும் வறட்சியைப் போக்கப் பலரும் விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்களை நாடுகின்றனர். ஆனால், நம் வீட்டிலேயே இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு இதற்கு நிரந்தரத் தீர்வை எட்ட முடியும். காய்ச்சாத பச்சை பால், ரோஸ் வாட்டர் மற்றும் தேன் ஆகிய மூன்றையும் சம அளவில் கலந்து ஒரு கலவையைத் தயார் செய்ய வேண்டும். இந்த இயற்கை கலவையை உதடுகளில் தடவி 15 நிமிடங்கள் வரை அப்படியே ஊறவிட வேண்டும்.
பின்னர் மென்மையான பருத்தித் துணியால் உதடுகளைத் துடைத்து எடுக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து தினமும் இரவில் செய்து வருவதன் மூலம் உதடுகளின் வறட்சி நீங்கி மென்மை பெறும். இரசாயனக் கலப்புகள் இல்லாத இந்த வீட்டு வைத்தியம் உதடுகளுக்கு இயற்கை பொலிவைத் தருகிறது. எளிய முறையில் குறைந்த செலவில் உதடுகளைப் பராமரிக்க இதுவே சிறந்த வழியாகும்…

