Home செய்திகள் ஆட்சியில் பங்கு: ஸ்டாலின் பதறுவது ஏன்? சேலம் மாநாட்டில் தவெக தலைவர் விஜய் அதிரடி கேள்வி..

ஆட்சியில் பங்கு: ஸ்டாலின் பதறுவது ஏன்? சேலம் மாநாட்டில் தவெக தலைவர் விஜய் அதிரடி கேள்வி..

தமிழக அரசியலில் ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற கோஷம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற தத்துவமெல்லாம் தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பதறுகிறார். விக்ரவாண்டி மாநாட்டில் நான் வீசிய அந்த அரசியல் குண்டு, இப்போது அனைத்துக் கூட்டணிகளிலும் வெடித்துக் கொண்டிருக்கிறது,” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆட்சியில் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற விஜய்யின் இந்த நிலைப்பாடு, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக, தற்போதைய ஆளுங்கட்சியான திமுக-வின் கூட்டணிக்குள் இந்த ‘பங்கு’ விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி வருவதை விஜய் தனது பேச்சின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்…

Exit mobile version