தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நாளை (பிப்ரவரி 17, 2026) தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக தேர்தல் ஆண்டின்போது முழுமையான பட்ஜெட்டிற்குப் பதிலாக, சில மாதங்களுக்கான செலவினங்களுக்கு ஒப்புதல் பெறும் வகையில் இடைக்கால பட்ஜெட் (Vote on Account) தாக்கல் செய்யப்படும். அதன்படி, நாளை தாக்கல் செய்யப்படவுள்ள இந்த பட்ஜெட்டில் கல்வி, விவசாயம் மற்றும் மகளிர் நலன் சார்ந்த சிறப்பு அறிவிப்புகள் வெளியாகலாம் என பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது…

