Sunday, March 1, 2026
No menu items!

“எனக்கும் எந்த கட்சிக்கும் தொடர்பில்லை” – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த திரிஷா..!!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகை த்ரிஷா, சமீபகாலமாகத் தன்னைப்பற்றி பரவி வரும் அரசியல் வதந்திகளுக்குத் தற்போது அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் த்ரிஷா குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியில் இணையப் போவதாகவும், அவருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் உலா வந்தன.இதனால் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“எனக்கும் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. அரசியலைப் பொறுத்தவரை நான் எப்போதும் நடுநிலையாகவே இருக்கிறேன்,” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.இதன் மூலம் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த யூகங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது மணிரத்னம் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் படங்களில் பிஸியாக நடித்து வரும் த்ரிஷா,

தனது முழு கவனத்தையும் சினிமாவில் மட்டுமே செலுத்தி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “அரசியல் ஆர்வம் தற்போதைக்கு இல்லை” என்பதை அவர் இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News