பொதுவாகவே ரயில் பயணம் என்பது பல பேருக்கு பிடித்த ஒன்றாக தான் உள்ளது என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை . அதுமட்டுமல்லாமல் வெகு தூரம் பயணிக்கும் இடத்திற்கு ரயிலில் சென்றால் சௌகரியமாக இருக்கும் என்று மக்களும் உணர்கிறார்கள் . ஆனால் பண்டிகை நாட்கள் , வார இறுதி நாட்களில்,
ரயில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி நாடு முழுவதும் கடந்த ஏழு மாதங்களில் அதாவது (ஏப்ரல் முதல் அக்டோபர்) வரை ரயில் பயணம் மேற்கொண்டோரின் எண்ணிக்கை வெளியாகி உள்ளது.
அந்த வகையில் கடந்த ஏழு மாதங்களில் “17.60 கோடி” பேர் ரயிலில் பயணம் செய்துள்ளார்களாம் . அது மட்டுமல்லாமல் தினமும் 2.40 கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருவதாக ரயில்வேத்துறை அறிவித்துள்ளது…

