தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். குறிப்பாக இவர் இசையமைக்கும் படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் படங்களாக அமைந்து வருகிறது . தற்போது இவர் தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு ,ஹிந்தி மொழி படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார் .
இந்நிலையில் 35 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் அனிருத் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று அவருடைய தந்தை ரவி ராகவேந்திரா கூறியுள்ளார் . அந்த வகையில் அவர் கூறியதாவது , இப்போதுள்ள காலகட்டத்தில் எந்த பையனும் பெற்றோர்களிடம்,
எனக்கு பெண் பாருங்கள் என்று கேட்பதில்லை . திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறார்களே தவிர அதற்காக எந்த முடிவையும் எடுப்பதில்லை .அதனால் பொறுத்திருந்து பார்ப்போம் அனிருத் என்ன சொல்கிறார் என்று கூறியுள்ளார் ரவி ராகவேந்திரா…
