Monday, March 2, 2026
No menu items!

உங்க வீட்டுக்கு மகாலட்சுமி வருணுமா ..?? இந்த 5 மலர்களால் வழிபடுங்க ..!!

எல்லா மனிதர்களும் கஷ்ட காலங்களில் மனிதர்களை விட கடவுளை தான் அதிகம் தேடுவார்கள் . காரணம் எவ்வளவு கஷ்டத்திலும் கோவிலுக்கு சென்றால் திரும்ப வரும்போது சற்று மன நிம்மதி கிடைக்கும் . அப்படி வாழ்க்கையில் நிம்மதி இழந்தவர்கள் வாழ்க்கையில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் மகாலட்சுமிக்கு விருப்பமான இந்த ஐந்து மலர்களில் அர்ச்சனை செய்து வழிபட வேண்டுமாம். அந்த வகையில் மல்லிகை ,தாமரை ,சாமந்திப்பூ, செம்பருத்தி ,ரோஜா ,

 

போன்ற மலர்கள் மகாலட்சுமிக்கு விருப்பமான மலர்களாம்.  இதில் மல்லிகை பூவை மகாலட்சுமிக்கு அணிவிப்பதால் அவர் மனம் மகிழ்ந்து குடும்ப ஒற்றுமை ,அன்பு ஆகியவை நிலைக்க அருள் செய்வாராம்.  அதேபோல தாமரை மலரை வைத்து படைத்து வழிபட்டால் நிம்மதி பலம் ஆகியவற்றை கொடுப்பதற்கு அருள்வாராம். இதைத் தொடர்ந்து சாமந்தி பூ படைத்து வழிபடுவதால்,

 

அதிர்ஷ்டம் மற்றும் நன்மைகள் வந்து சேருமாம். இதைத்தொடர்ந்து செம்பருத்தி மலரை மகாலட்சுமிக்கு படைப்பதால் அழகு பெருக்கம் ஆகியவற்றிற்கு அருள் தர வழிவகுமாம். கடைசியாக ரோஜா பூவை மகாலட்சுமிக்கு வைத்து வழிபட்டால் பொருளாதார நிலை ,வீட்டில் அமைதி மற்றும் பெண்களுக்கு திருமண தடைகள் அகலுமாம் …

Related Articles

Stay Connected

0FansLike

Latest News