Monday, March 2, 2026
No menu items!

ஹர்ஷித் ரானாவைப் பார்த்து பயந்த நியூசி கேப்டன்.? – உண்மையை உடைத்த சீக்கா!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் துடிப்பான வீரரான ஹர்ஷித் ரானாவின் ஆட்டத்தைப் பார்த்து நியூசிலாந்து கேப்டனே மிரண்டுவிட்டதாக முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் இளம் ஆல்-ரவுண்டரான ஹர்ஷித் ரானா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய அவர், விராட் கோலியுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், தனது அதிரடி ஆட்டத்தால் எதிரணியினரை திணறடித்தார். இந்த ஆட்டம் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய முன்னாள் தேர்வு குழு தலைவரும்,

முன்னாள் வீரருமான ஸ்ரீகாந்த், ஹர்ஷித் ரானாவின் அணுகுமுறையை வெகுவாகப் பாராட்டினார். அவர் கூறுகையில், “ஹர்ஷித் ரானா களத்தில் நின்ற விதம் மற்றும் அவரது உடல்மொழி (Body Language) நியூசிலாந்து

கேப்டனை பயமுறுத்திவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஒரு இளம் வீரர் இவ்வளவு தைரியமாக விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார். மைதானத்தில் விராட் கோலியுடன் இணைந்து ஹர்ஷித் ரானா

வெளிப்படுத்திய ஆக்ரோஷம் இந்திய அணிக்குத் தேவையான ஒன்று என்றும், எதிர்காலத்தில் அவர் ஒரு சிறந்த மேட்ச் வின்னராக உருவெடுப்பார் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News