Home சினிமா வண்டலூர் பூங்காவில் குட்டி யானையை தத்தெடுத்த ‘எஸ்கே’ – குவியும் பாராட்டு.!!

வண்டலூர் பூங்காவில் குட்டி யானையை தத்தெடுத்த ‘எஸ்கே’ – குவியும் பாராட்டு.!!

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், ‘பிரக்குதி’ என்ற யானையை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். வனவிலங்குகள் மீதான ஆர்வத்தாலும், அவற்றைப் பராமரிக்கும் நோக்கிலும் அவர் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார்.அடுத்த 6 மாத காலத்திற்கு அந்த யானைக்கான முழு பராமரிப்புச் செலவையும் ,

அவரே ஏற்றுக் கொள்வார் என்று பூங்கா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதில் யானைக்கான உணவு மற்றும் இதர பராமரிப்புச் செலவுகள் அடங்கும்.ஏற்கனவே பல திரைப்பிரபலங்கள் விலங்குகளைத் தத்தெடுத்து வரும் நிலையில்,

நடிகர் சிவகார்த்திகேயனின் இந்தச் செயல் ரசிகர்களிடையேயும், சமூக ஆர்வலர்களிடையேயும் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது. ‘அன்பு சூழ் உலகு’ என்ற தலைப்பில் அவரது இந்த நல்லுள்ளத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Exit mobile version