Home செய்திகள் BSNL அதிரடி.!! ரூ.400-க்கு குறைவான விலையில் பிளான் அறிமுகம்..!!

BSNL அதிரடி.!! ரூ.400-க்கு குறைவான விலையில் பிளான் அறிமுகம்..!!

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், தனது ஃபைபர் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்காக ‘Spark’ என்ற புதிய மலிவு விலை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜனவரி 13, 2026 முதல் அமலுக்கு வந்துள்ள இத்திட்டம், மாதம் வெறும் ரூ.399 கட்டணத்தில் 50 Mbps வேகத்துடன் 3300GB அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது.வீட்டில் இருந்து வேலை செய்வோர், ஆன்லைன் வகுப்பு மாணவர்கள் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் செய்வோருக்கு ,

இது வரப்பிரசாதமாக இருக்கும். இந்த அறிமுகச் சலுகை விலை முதல் 12 மாதங்களுக்கு மட்டுமே; அதன்பின் கட்டணம் ரூ.449-ஆக உயரும். வரம்பற்ற அழைப்புகள் மற்றும் பாதுகாப்பான பிரவுசிங் வசதியும் இதில் உண்டு. இணைப்பைப் பெற 1800 4444 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு “HI” என குறுஞ்செய்தி அனுப்பினால் போதும்.

மேலும், மொபைல் வாடிக்கையாளர்களுக்கான கூடுதல் டேட்டா சலுகையை ஜனவரி 31, 2026 வரை பிஎஸ்என்எல் நீட்டித்துள்ளது. இதன்படி ரூ.225, ரூ.347 உள்ளிட்ட குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களில் தினசரி கூடுதலாக 0.5GB டேட்டா இலவசமாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது…

Exit mobile version