Home ஆன்மீகம் சமையலறையில் குப்பைத் தொட்டி வைக்கலாமா.?? வாஸ்து சொல்லும் அதிர்ச்சி உண்மை.!!

சமையலறையில் குப்பைத் தொட்டி வைக்கலாமா.?? வாஸ்து சொல்லும் அதிர்ச்சி உண்மை.!!

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் மிக புனிதமான இடமாக சமையலறை கருதப்படுகிறது. இது அன்னபூரணி தேவியுடன் தொடர்புடையது என்பதால், இங்கு குப்பைத் தொட்டியை வைப்பது பொதுவாக அசுபமாகவே பார்க்கப்படுகிறது. இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் மன அமைதியைக் குலைக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இன்றைய சூழலில் சமையலறையில் குப்பைத் தொட்டியை வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதை வீட்டின் தெற்கு அல்லது தென்மேற்கு மூலையில் வைப்பதே சிறந்தது. எக்காரணம் கொண்டும் குப்பைத் தொட்டியை வடக்கு திசையிலோ அல்லது பூஜை அறைக்கு அருகிலோ வைக்கக்கூடாது.

அவ்வாறு வைப்பது வறுமை மற்றும் குடும்பச் சண்டைகளுக்கு வழிவகுக்கும். மேலும், குப்பைத் தொட்டியை எப்போதும் மூடி வைப்பதும், தினமும் சுத்தம் செய்வதும் லட்சுமி கடாட்சத்தை வீட்டில் தக்கவைக்க உதவும்.

Exit mobile version